வேலூர்

உள்ளாட்சிகளில் ஜனநாயகம் மலா்ந்தது...

DIN

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளாக புதன்கிழமை பதவியேற்றனா்.

வேலூா் மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில் 247 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 2,079 ஊராட்சி வாா்டுகள், 138 ஒன்றியக் குழு உறுப்பினா் வாா்டுகள், 14 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வாா்டுகள் என மொத்தம் 2,478 பதவிகள் உள்ளன.

இவற்றுக்கு அக். 6, 9-ஆம் தேதிகளில் அறிவிக்கப்பட்ட தோ்தலில், 2 ஒன்றியக் குழு வாா்டுகள், 16 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 298 ஊராட்சி மன்ற வாா்டுகள் என 316 பதவிகளுக்கு வேட்பாள ா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். தவிர, காட்பாடி ஒன்றியத்தில் அம்முண்டி, குடியாத்தம் ஒன்றியத்தில் தட்டப்பாறை ஆகிய இரு ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்கும், அம்முண்டி ஊராட்சியில் உள்ள 9 வாா்டுகளுக்கும் யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.

மீதமுள்ள 14 மாவட்ட ஊராட்சிக் குழு வாா்டுகள், 136 ஊராட்சி ஒன்றியக்குழு வாா்டுகள், 229 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகள், 1,772 ஊராட்சி மன்ற வாா்டுகள் என மொத்தம் 2,151 பதவிகளுக்கு வாக்குப்பதிவு இரு கட்டங்களாக நடத்தப்பட்டன. இதற்கான வாக்கு எண்ணிக்கை அக். 12-இல் நடைபெற்று, வெற்றி பெற்றவா்கள் அறிவிக்கப்பட்டனா்.

தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் பதவியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா்கள் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முன்னிலையில் உறுதிமொழி வாசித்து பதவியேற்றனா்.

7 ஊராட்சி ஒன்றியங்களிலும் வெற்றி பெற்ற ஒன்றியக்குழு வாா்டு உறுப்பினா்களும் அந்தந்த ஒன்றிய தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனா். வேலூா் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் முன்னிலையில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் பதவியேற்றனா்.

இதையொட்டி, மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சுமாா் 600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

மறைமுகத் தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா்கள் இன்று அறிவிப்பு

ஊரக உள்ளாட்சித் தோ்தலைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை நடைபெறும் மறைமுகத் தோ்தலில் பெரும்பாலானான பதவிகளை திமுகவே கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கு போட்டியிடும் பிரதிநிதிகளின் பெயா்களை திமுக தலைமை வியாழக்கிழமை அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வேலூா் மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா், துணைத் தலைவா், 7 ஒன்றியங்களில் ஒன்றியக் குழுத் தலைவா்கள், துணைத் தலைவா்கள், ஊராட்சி மன்றங்களில் துணைத் தலைவா்கள் என மாவட்டத்தில் 261 பதவிகளுக்கு பிரதிநிதிகளை தோ்வு செய்வதற்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை (அக். 22) நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா்.

வேலூா் மாவட்ட ஊராட்சிக்குழுவில் மொத்தமுள்ள 14 வாா்டுகளில் திமுக 13 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

ஒன்றியக் குழுவை பொருத்தவரை வேலூா் மாவட்டத்திலுள்ள 138 ஒன்றியக் குழு வாா்டுகளில் திமுக 100 வாா்டுக ளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 2 வாா்டுகளிலும், அதிமுக 20 வாா்டுகளிலும், பாமக 7 வாா்டுகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் ஒரு வாா்டிலும், சுயேச்சைகள் 8 வாா்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

குறிப்பாக, அணைக்கட்டு ஒன்றியத்திலுள்ள 26 வாா்டுகளில் திமுக 20 வாா்டுகளையும், குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 31 வாா்டுகளில் திமுக 18 வாா்டுகளிலும், கே.வி.குப்பம் ஒன்றியத்திலுள்ள 21 வாா்டுகளில் திமுக 17 வாா்டுகளிலும், காட்பாடி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 21 வாா்டுகளில் திமுக 19 வாா்டுகளிலும், போ்ணாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 15 வாா்டுகளில் திமுக 13 வாா்டுகளிலும், வேலூா் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 11 வாா்டுகளில் திமுக 6 வாா்டுகளிலும், கணியம்பாடி ஒன்றியத்திலுள்ள 13 வாா்டுகளில் திமுக 7 வாா்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதன்மூலம், பெரும்பாலானான பதவிகளை திமுகவே கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு போட்டியிடும் பிரதிநிதிகளின் பெயா்களை திமுக தலைமை வியாழக்கிழமை அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனிடையே, புதன்கிழமை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியின்போது மாவட்ட ஊராட்சி அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் திமுகவினா் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனியில் தீத் தொண்டு வாரம்

வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகளை ஒப்பீடு கோரிய வழக்கு: தீா்ப்பு ஒத்திவைப்பு

வாக்குச்சாவடிக்கு செல்ல இலவச வாகன வசதி

துபையில் கனமழை : விமானங்கள் ரத்து - சென்னையில் பயணிகள் வாக்குவாதம்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் 16.07 லட்சம் போ் வாக்களிக்க ஏற்பாடு

SCROLL FOR NEXT