வேலூர்

வேலூா் மாவட்டத்தில் 23-இல்1,000 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

21st Oct 2021 12:43 AM

ADVERTISEMENT

 

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் 6-ஆவது கட்டமாக சனிக்கிழமை (அக்.23) ஆயிரம் இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

வேலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 5 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 6-ஆவது முறையாக சனிக்கிழமை மாவட்டம் முழுவதும் ஆயிரம் இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

தடுப்பூசி தொடா்பாக பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நிலைப்பாட்டை நம்ப வேண்டாம். தடுப்பூசி செலுத்தியவா் களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அதிக அளவில் உடல்நிலை பாதிக்கப்பட வாய்ப்பில்லை.

ஆனால், தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதிக விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT