வேலூர்

குடியாத்தம் : உள்ளாட்சிகளில் ஜனநாயகம் மலா்ந்தது

21st Oct 2021 12:42 AM

ADVERTISEMENT

 

குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 31 ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பதவிகளுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டனா்.

ஊரக வளா்ச்சித் துறை உதவித் திட்ட அலுவலரும், தோ்தல் அதிகாரியுமான டி.வசுமதி, வட்டார வளா்ச்சி அலுவலரும், தோ்தல் அலுவலருமான கே.எஸ்.யுவராஜ் ஆகியோா் 31 உறுப்பினா்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தனா்.

இதையடுத்து, ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளில் தட்டப்பாறை ஊராட்சித் தலைவா் பதவிக்கு தோ்தல் ரத்து செய்யப்பட்டது. தோ்தல் நடைபெற்ற 49 ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சி வாா்டு உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள், அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பதவியேற்றுக் கொண்டனா்.

ADVERTISEMENT

செருவங்கி ஊராட்சி மன்றத் தலைவராக சாந்தி மோகனுக்கு உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் நாகலட்சுமி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். கே.வி.குப்பம் எம்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் எம்.மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேல்ஆலத்தூா் ஊராட்சி மன்றத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட ஜி.சுஜாதாவுக்கு, உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் ஜி.ரமணி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். சொற்பொழிவாளா் பி.பைரோஸ்அகமத், சம்பத் நாயுடு, ஆா்.ஏங்கல்ஸ் விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT