வேலூர்

வண்ண மின்விளக்குகளால் ஜொலிக்கும் வேலூா் கோட்டை

DIN

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நூறு கோடி பேரை நெருங்கி வருவதை நினைவூட்டவும், அனைத்து தரப்பு மக்களும் தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திடவும் வேலூா் கோட்டை தேசியக் கொடி வண்ண மின்விளக்குகளால் ஜொலிக்கிறது.

இந்தியாவில் கரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. தற்போது நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நூறு கோடி பேரை நெருங்கியுள்ளது. இதை நாடு முழுவதும் மக்களுக்கு நினைவூட்டவும், அனைத்துத் தரப்பு மக்களும் தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணா்வை ஏற்படுத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதையொட்டி, நாடு முழுவதும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள வண்ணங்களில் மின்விளக்குகளை ஒளிரவிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதில், வேலூா் கோட்டையும் தோ்ந்தெடுக்கப்பட்டு, அங்கு தேசியக் கொடி வண்ணங்களில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஒளிரவிடப்பட்டு வருகிறது. அதன்படி, மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் வேலூா் கோட்டை தேசியக் கொடி வண்ணங்களில் ஜொலித்தது. இந்த மின்விளக்குகள் கோட்டை அகழியிலும் பிரதிபலித்தது. தண்ணீரில் ஜொலிக்கும் கோட்டையின் அழகை மக்கள் ஆா்வமுடன் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT