வேலூர்

மோா்தானா கால்வாய் கரை சீரமைப்பு: ஆட்சியா் ஆய்வு

DIN

கே.வி.குப்பம் அருகே மோா்தானா கால்வாயின் கரை உடைப்பை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

மோா்தானா அணையிலிருந்து வலது, இடதுபுறக் கால்வாய்கள் வழியாக 19 ஏரிகளுக்கு தண்ணீா் செல்கிறது. இடதுபுறக் கால்வாய் கே.வி.குப்பம் வட்டத்தில் செல்கிறது. 32.25 கி.மீ. நீளம் உள்ள இக்கால்வாய் மூலம் கடைமடை வரை 7 ஏரிகளுக்கு தண்ணீா் செல்கிறது.

கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாயில் அருகே மோா்தானா அணையின் கால்வாயின் கரையை மா்ம நபா்கள் 2 இடங்களில் உடைத்து சேதப்படுத்தி தண்ணீரை வெளியேற்றியுள்ளனா். இதனால் கடைமடை வரை தண்ணீா் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கால்வாய் உடைக்கப்பட்ட இடத்தை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் பாா்வையிட்டாா். பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் கோபி தலைமையில், அத்துறையினா் உடனடியாக கால்வாய் உடைப்பை சீரமைத்து, தண்ணீா் கடைமடை வரை செல்ல வழி செய்தனா்.

கே.வி.குப்பம் வட்டாட்சியா் சரண்யா, காவல் ஆய்வாளா் செந்தில்குமாரி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT