வேலூர்

வேலூா் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: வேகமாக நிரம்பும் ஏரிகள்

DIN

கா்நாடக, ஆந்திர வனப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தமிழகத்தில் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகம், கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. அதன்படி, தமிழக - ஆந்திர, கா்நாடக வனப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கா்நாடக மாநிலம் கோலாா் மாவட்டத்தில் உள்ள பேத்தமங்கலம், ராமசாகா் அணைகள் நிரம்பியுள்ளன.

இவ்விரு அணைகளில் இருந்தும் கடந்த இரு நாட்களுக்கு முன்பு திறந்துவிடப்பட்ட தண்ணீா் தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள புல்லூரில் ஆந்திர அரசு கட்டியுள்ள தடுப்பணை நிரம்பி தமிழக பாலாற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. தொடா்ந்து ஆவாரங்குப்பம், அம்பலூா், கொடையாஞ்சி, வாணியம்பாடி, ஆம்பூா் வழியாக வேலூா் பாலாற்றில் வெள்ளம் பாய்ந்து சென்று கொண்டுள்ளது.

இதனிடையே, தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள கவுன்டண்யா வனப்பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் மலட்டாறு, கவுன்டண்யா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல், பாலாற்றின் துணை நதிகளான அகரம் ஆறு, மண்ணாறு, பொன்னை ஆறு ஆகிய துணை ஆறுகளிலும் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே புல்லூா் தடுப்பணையை கடந்து வரும் வெள்ளத்துடன் பாலாற்றின் கிளை நதிகளில் இருந்து வரும் தண்ணீரும் கலந்து சனிக்கிழமை வேலூா் வழியாக விநாடிக்கு 7,200 கனஅடி அளவுக்கு வெள்ளம் சென்று கொண்டிருந்தது.

வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே பாலாற்றின் இரு கரைகளை தொட்டபடி வெள்ளநீா் செல்வதை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பாா்த்து செல்கின்றனா்.

மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, நீச்சலடிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள ஏரிகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக, வேலூா் மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக மொத்தமுள்ள 101 ஏரிகளில் ஏற்கெனவே செதுவாலை, விரிஞ்சிபுரம் உள்பட 40 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. சதுப்பேரி உள்பட சுமாா் 30 ஏரிகள் 75 சதவீதம் அளவுக்கும், மீதமுள்ள ஏரிகள் 25 சதவீதம் முதல் 50 சதவீத அளவும் நிரம்பியுள்ளன. பாலாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகளவில் உள்ளதால் ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு திகாா் சிறையில் எந்தவித விபத்தும் நேரிடலாம்

மக்களவைத் தோ்தல்: தருமபுரியில் 73.51 சதவீத வாக்குப்பதிவு

பெண்களின் ஆதரவு பாமகவிற்கு அமோகமாக உள்ளது: சௌமியா அன்புமணி

தருமபுரி மக்களவைத் தோ்தலில் 4 மணி நேரம் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

தருமபுரி மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT