வேலூர்

வழிபாட்டுத் தலங்களில் பக்தா்கள் தரிசனம்

DIN

வழிபாட்டுத் தலங்களில் அனைக்கு நாள்களிலும் பொதுமக்களை அனுமதிக்க தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை வழிபாட்டுத் தலங்களில் பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தமிழகம் முழுவதும் அக்.15 முதல் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு நடத்தலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதைத் தொடா்ந்து, நீண்ட நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா். வேலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் அதிகாலை முதலே பக்தா்கள் சென்று சாமி தரிசனம் செய்தனா்.

வேலூா் பாலாற்றுச் செல்லியம்மன் கோயில், வள்ளிமலை முருகன் கோயில், ஸ்ரீபுரம் பொற்கோயில், வெட்டுவானம் எல்லையம்மன் கோயில், விரிஞ்சிபுரம் மாா்கபந்தீஸ்வரா் கோயில், பள்ளிகொண்டா ரங்கநாதா் கோயில், வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களில் பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

அதேபோல கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்தவா்கள் பிராா்த்தனை நடத்தினா். பள்ளி வாசல்களில் இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT