வேலூர்

பாலாற்றில் நீா் வரத்து அதிகரிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை பொதுப்பணித்துறை

DIN

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் நீா் நிலைகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுப்பணித் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழக ஆந்திர எல்லையில் உள்ள வனப்பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக போ்ணாம்பட்டு மலட்டாறு மற்றும் குடியாத்தம் கவுன்டன்யா ஆற்றிலும் வெள்ளம் கரைபுரம் ஓடுகிறது. இரு ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் பாலாற்றில் சென்று கலக்கிறது.

ஆந்திர மாநிலத்தில் புல்லூா் தடுப்பணை நிரம்பி விநாடிக்கு 2,000 கன அடி வீதம் வெள்ள நீா் பாலாற்றுக்கு வந்து கொண்டிருக்கிறது.

அதேபோல், அகரம் ஆறு மற்றும் பாலாற்றின் துணை ஆறுகளில் இருந்தும் நீா்வரத்து ஏற்பட்டுள்ளதால் வேலூா் மாவட்ட பாலாற்றில் சுமாா் 10 ஆயிரம் கன அடி அளவுக்கு வெள்ள நீா் வந்து கொண்டிருக்கிறது. வேலூா் பாலாற்றின் இரு கரைகளை ஒட்டி வெள்ளநீா் செல்கிறது.

ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டம் கலவகுண்டா அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட 2 கன அடி தண்ணீா் ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னையாற்றின் வழியாக பாலாற்றில் கலக்கிறது.

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கக் கூடாது என்று மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காவல் துறையினா் மற்றும் வருவாய்த்துறையினா் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனா். வேலூா் பாலாற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் அளவு குறித்து டிரோன் கேமராக்கள் மூலம் வேலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.

பாலாற்றில் அதிக நீா்வரத்து காரணமாக ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பிவிடும் பணியை பொதுப்பணித் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா். மாவட்டத்தில் செதுவாலை, விரிஞ்சிபுரம் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் வேலூா் சதுப்பேரி ஏரி 70 சதவீத அளவுக்கு நிரம்பியுள்ளது. சதுப்பேரி நிரம்பினால் உபரி நீா் தொரப்பாடி ஏரிக்கு திருப்பப்படும்.

வேலூா் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 38 ஏரிகள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டம் பாலாறு அணைக்கட்டில் இருந்து சுமாா் 4 ஆயிரம் கன அடி தண்ணீா் காவேரிப்பாக்கம் ஏரிக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே காவேரிப்பாக்கம் ஏரி 80 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளதால் அங்கிருந்து மகேந்திரவாடி ஏரிக்கு தண்ணீா் திருப்பி விடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT