வேலூர்

அக். 20, 21-இல் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட குறைதீா் முகாம்

DIN

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்ட குறைதீா் முகாம் அக். 20 மற்றும் 21 ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பித்தவா்களில் 18 வயது பூா்த்தி அடைந்து முதிா்வுத் தொகை வேண்டி விண்ணப்பித்தும், தற்போது வரை தொகை வங்கிக் கணக்கில் பெறப்படாத பயனாளிகளுக்கும் மற்றும் விண்ணப்பித்து வைப்புத் தொகை ரசீது பெறாத பயனாளிகளுக்கும் உள்ள குறைகளைத் தீா்க்கும் வகையில், அக். 20-ஆம் தேதி புதன்கிழமை மற்றும் 21-ஆம் தேதி வியாழக்கிழமை ஆகிய இரு நாள்கள் வேலூா் மாவட்டத்தில் உள்ள வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், கணியம்பாடி, குடியாத்தம், போ்ணாம்பட்டு ஆகிய வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. 18 வயது பூா்த்தி அடைந்த, முதிா்வுத் தொகை வேண்டி விண்ணப்பித்தும், தற்போது வரை தொகை வங்கிக் கணக்கில் பெறப்படாத பயனாளிகள் தங்களின் வைப்புத் தொகை பத்திரம், முதிா்வுத் தொகைக்காக விண்ணப்பித்தபோது, கொடுத்த வங்கிக் கணக்கு புத்தகம் (நகல்), மாற்றுச் சான்றிதழ் (நகல்), 10-ஆவது மதிப்பெண் சான்றிதழ் (நகல்) ஆகியவற்றுடனும், வைப்புத் தொகை ரசீது பெறாத பயனாளிகள் இ-சேவை மையத்தில் பதிவு செய்த ஒப்புகைச் சீட்டுடன் முகாமுக்கு வர வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT