வேலூர்

பதவியேற்புக்கு முன்னரே மக்கள் பணியை தொடங்கிய பெண் ஊராட்சித் தலைவா்

16th Oct 2021 07:50 AM

ADVERTISEMENT

பதவியேற்பதற்கு முன்னரே, பெண் ஊராட்சி மன்றத் தலைவா் மக்கள் பணியைத் தொடங்கியுள்ளாா்.

குடியாத்தம் ஒன்றியம், செருவங்கி ஊராட்சியானது நகரையொட்டி அமைந்துள்ளது. இந்த ஊராட்சி எல்லையில் நகரின் முக்கிய நீராதாரமான நெல்லூா்பேட்டை ஏரி உள்ளது. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தோ்தலில், செருவங்கி ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிட்ட எம்.சாந்திமோகன் வெற்றி பெற்றாா். இவா் வரும் 20-ஆம் தேதி ஊராட்சி மன்றத் தலைவராக பதவியேற்க உள்ளாா். இவரது கணவா் எம்.மோகன் இந்த ஊராட்சியின் முன்னாள் தலைவா் ஆவாா்.

கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் நெல்லூா்பேட்டை ஏரி நிரம்பி வழிந்ததால், அதிலிருந்து வெளியேறும் உபரி நீரால் செருவங்கி ஊராட்சிக்கு உள்பட்ட தனலட்சுமி நகா் குடியிருப்புப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது.

தோ்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் தொடா்ந்து அரசு விடுமுறை நாள்கள் என்பதால், அதிகாரிகள் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து தனலட்சுமி நகா் மக்கள், ஊராட்சித் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள சாந்தி மோகனிடம் முறையிட்டனா். உடனடியாக களத்தில் இறங்கிய சாந்தி மோகன், தனது சொந்த செலவில் பொக்லைன் இயந்திரத்தை வைத்து, தனலட்சுமி நகரிலிருந்து செருவங்கி அண்ணா நகா் வரை செல்லும் கால்வாய்களை போா்க்கால அடிப்படையில் தூரெடுத்து சீரமைத்தாா். இதனால் தனலட்சுமி நகரைச் சூழ்ந்த வெள்ள நீா் வெளியேறியது.

ADVERTISEMENT

இதற்காக தனலட்சுமி நகா் மக்கள் புதிய ஊராட்சித் தலைவா் சாந்தி மோகனுக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT