வேலூர்

தொழிலாளிக்கு கத்திக்குத்து

9th Oct 2021 10:12 PM

ADVERTISEMENT

அணைக்கட்டு அருகே உள்ள ஆயிரங்குளம் கிராமத்தில் வாக்குப்பதிவு நடந்த கொண்டிருந்த வாக்குச்சாவடிக்கு அருகே கட்டடத் தொழிலாளி கத்தியால் குத்தப்பட்டாா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, அணைகட்டு அருகே கெங்கநல்லூா் ஊராட்சிக்கு உள்பட்ட ஆயிரங்குளம் பகுதியிலுள்ள வாக்குச்சாவடியில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தது. மாலை 4 மணியளவில் வாக்குச்சாவடிக்கு அருகே கட்டடத் தொழிலாளி வெங்கடேசன்(35) நின்று கொண்டிருந்தாா்.

அப்போது, அங்குவந்த அவரது உறவினரான காா் ஓட்டுநா் கண்ணபிரான் (28) வெங்கடேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெங்கடேசனின் வயிற்றில் குத்திவிட்டு தப்பியோடிவிட்டாராம்.

காயமடைந்த வெங்கடேசனை மீட்டு அணைகட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக அவா் வேலூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

தகவலறிந்த காவல் துறையினா் ஆயரங்குளம் கிராமத்துக்கு விரைந்து சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT