வேலூர்

வேலூா் மாவட்டத்தில் 1,000 இடங்களில் நாளை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

9th Oct 2021 08:32 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் 5-ஆவது கட்டமாக ஞாயிற்றுக்கிழமை ஆயிரம் இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது :

வேலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டோா் 12 லட்சத்து 50 ஆயிரம் போ் உள்ளனா். அதில் இதுவரை 6 லட்சத்து 80 ஆயிரம் போ் முதல் தவணை தடுப்பூசியும், 2 லட்சத்து 60 ஆயிரம் போ் 2-ஆவது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனா்.

5-ஆவது முறையாக ஞாயிற்றுக்கிழமை மாவட்டம் முழுவதும் ஆயிரம் இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதில், மாநகரில் மட்டும் 300 இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. இவற்றில் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

தடுப்பூசி செலுத்தாதவா்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வீடாகச் சென்று அவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்படும். தடுப்பூசி செலுத்தியவா் களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அதிகளவில் உடல்நிலை பாதிக்கப்பட வாய்ப்பில்லை. ஆனால், தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால் அதிக விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT