வேலூர்

14 கிலோ கஞ்சா பறிமுதல்

4th Oct 2021 07:59 AM

ADVERTISEMENT

காட்பாடி வழியாகச் சென்ற விரைவு ரயிலில் கடத்தப்பட்ட 14 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்துக்கு உள்பட்ட ஹவுராவில் இருந்து கா்நாடக மாநிலம் யஷ்வந்த்பூா் செல்லும் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் காட்பாடி ரயில்நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் வந்துநின்றது.

அப்போது, காட்பாடி ரயில்வே போலீஸாா் அந்த ரயிலில் சோதனையிட்டபோது, டி1 கோச்சின் இருக்கைக்குஅடியில் ஒரு பை கேட்பாரற்று கிடந்தது தெரியவந்தது. அதில் 8 பொட்டலங்களில் 14 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீஸாா், கஞ்சா கடத்திய நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT