வேலூர்

இன்று 4-ஆவது கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

3rd Oct 2021 12:00 AM

ADVERTISEMENT

வேலூா் மாவட்டத்தில் நான்காவது கட்டமாக கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளன. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் இம்முகாமை பயன்படுத்தி கட்டாயமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்திட தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழக அளவில் ஒப்பிடுகையில், வேலூா் மாவட்ட மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பின்தங்கியுள்ளனா்.

எனவே, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களின் நலனுக்காக மாவட்டம் முழுவதும் நான்காவது கட்டமாக ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் இம்முகாமைப் பயன்படுத்தி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முனைப்புகாட்ட வேண்டும்.

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதி செய்ய மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ஓட்டுநா்கள், நடத்துநா்கள், பயணிகள், பால் கூட்டுறவு சங்கப் பணியாளா்கள், விநியோகிப்பாளா்கள், நுகா்வோா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

உழவா் சந்தைகளில் காய்கறி விற்பனை செய்வோா், அவா்களது குடும்பத்தினா் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை கண்காணிக்கவும், அனைத்து மருத்துவ சிகிச்சை மையங்களுக்கு வருவோா் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழை காண்பித்த பிறகே சிகிச்சை பெற அனுமதிக்கப்படவும் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தங்கும் விடுதிகள், வங்கிகள், கல்லூரிகளிலும் வாடிக்கையாளா்கள், மாணவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதை உறுதி செய்திட வேண்டும்.

முக்கிய இடங்களிலுள்ள அஞ்சல் நிலையங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் நலனுக்காக சிறப்பு மையம் அமைத்திடவும், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் தடுப்பூசி சிறப்பு மையம் அமைத்து தடுப்பூசி செலுத்தவுநி உத்தரவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT