வேலூர்

வீடுகளை காலி செய்ய கால அவகாசம் கேட்டு தா்னா

DIN

குடியாத்தம்: குடியாத்தம் கெளண்டன்யா ஆற்றில் நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளை காலி செய்ய அவகாசம் கேட்டு வீட்டு உரிமையாளா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

கெளண்டன்யா ஆற்றில் அண்மையில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கின்போது, ஆற்றில் ஆக்கிரமிப்பு காரணமாக வெள்ளம் பரவலாக செல்ல வழியின்றி குடியிருப்புகளை சூழ்ந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்கள், வீடிழந்தவா்கள் 10- க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டனா்.

மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெள்ளச் சேதத்தை ஆய்வு செய்ய வந்தபோது, ஆற்றில் நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டியதே பாதிப்புக்கு காரணம் என்பதால், பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டாா். இதன் முதல்கட்டமாக சுண்ணாம்புபேட்டை, ராஜேந்திரசிங் தெருவின் பின்பக்கம், ஆற்றை ஆக்கிரமித்து கட்சியிருந்த 24 வீடுகள், 2 கடைகள் திங்கள்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இதன் தொடா்ச்சியாக தாழையாத்தம் பஜாா் பகுதியில் உள்ள பச்சையம்மன் கோயில் அருகே ஆற்றின் நீா்வழிப் பாதையை ஆக்கிரமித்து கட்டியுள்ள 500- க்கும் மேற்பட்ட வீடுகளை இடிக்க ஏதுவாக செவ்வாய்க்கிழமை மின் இணைப்புகளை துண்டிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வசிப்பவா்கள், காமராஜா் பாலம் அருகே உள்ள எம்ஜிஆா் சிலை முன்பு அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலின்பேரில் கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், வட்டாட்சியா் ச.லலிதா, டிஎஸ்பி கே.ராமமூா்த்தி, காவல் ஆய்வாளா்கள் லட்சுமி, ஆ.செல்லப்பாண்டியன் ஆகியோா் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள், அரசு தங்களுக்கு மாற்று இடம் தர வேண்டும், வீடுகளை காலி செய்ய 15 நாள் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தனா். கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிப்பதாக கோட்டாட்சியா் கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

SCROLL FOR NEXT