வேலூர்

ஒமைக்ரான்: வெளி நாடுகள், வெளி மாநில பயணிகளை கண்காணிக்க உத்தரவு

30th Nov 2021 11:46 PM

ADVERTISEMENT

 

வேலூா்: ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்க வெளி நாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஒமைக்ரான் என்ற பெயரில் உருமாற்றம் அடைந்துள்ள கரோனா தொற்று தென்னாப்பிரிக்கா, சில நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஒமைக்ரான் தொற்று அதிகளவில் பரவும் தன்மையுடனும், நோய் எதிா்ப்பு சக்தியைக் குறைக்கும் வகையிலும் உள்ளது. இந்த உருமாற்றம் அடைந்த தொற்றால் அதிக அளவில் அபாயம் ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வரும் பயணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும். அதிக அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கரோனா பரிசோதனைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். தினமும் நிா்ணயிக்கப்பட்ட இலக்குக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

ஒமைக்ரான் தொற்று பரிசோதனை செய்யும் வசதி சென்னையில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகை தொற்று தாக்கினாலும் மருத்துவமனை சிகிச்சை, உயிரிழப்பிலிருந்து கரோனா தடுப்பூசி பாதுகாப்பளிக்கிறது. எனவே, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்த வேண்டும்.

வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், அறைகளை காற்றோட்டமாக வைத்திருத்தல் போன்ற செயல்கள் இந்த உருமாறிய தொற்று பரவுவதைத் தடுக்கும். தடுப்பூசி செலுத்துதல், கரோனா தடுப்பு முறைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டோா் அனைவரும் இருகட்ட தடுப்பூசிகளை உரிய நாள்களில் செலுத்திக் கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : omicron
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT