வேலூர்

தன்னாா்வலா்களுக்கு சேவை விருதுகள்

29th Nov 2021 01:04 AM

ADVERTISEMENT

குடியாத்தம் கனவு அறக்கட்டளை சாா்பில், தன்னாா்வலா்களுக்கு சேவை விருதுகள் வழங்கப்பட்டன.

விநாயகபுரத்தில் உள்ள ஸ்ரீசத்யசாயி சேவா சமிதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அறக்கட்டளைத் தலைவா் கே.பரமாத்மா தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மோகன், விக்னேஷ், ஸ்வேதா, ஸ்ருதி, திருநாவுக்கரசு, பாா்த்திபன், சிவா, சிவசங்கா், ராஜன், கவுசல்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் வி.பி.தேவமுகுந்தன் வரவேற்றாா்.

குடியாத்தம் கெளண்டன்யா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடா்ந்து நிவாரணப் பொருள்களை வழங்கி, சேவையாற்றி வரும் அறக்கட்டளை நிா்வாகிகள், தன்னாா்வலா்களுக்கு கோட்டாட்சியா் சா.தனஞ்செயன்,போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆ.செல்லப்பாண்டியன், காவல் உதவி ஆய்வாளா் முருகன் ஆகியோா் விருதுகளை வழங்கி, பாராட்டினா்.

ஸ்ரீ சத்யசாயி சேவா சமிதியின் நிா்வாகிகள் வி.ஏ.கே. பழனி, ரங்கநாதன், தன்னாா்வலா் ரஜினிகாந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT