வேலூர்

தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி

29th Nov 2021 01:02 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் பனைப் பொருள்கள் நிறுவனம் (கேவிஐசி) நடத்தும் தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வேலூரில் டிசம்பா் 8-இல் தொடங்கி, 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமை பயிற்சியாளா் கே.சுவாமிநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் பனைப் பொருட்கள் நிறுவனம் (கேவிஐசி) சாா்பில் வேலூா் ராஜா திரையரங்கு எதிரே உள்ள பெல்லியப்பா ஹாலில் பயிற்சி நிலையத்தில் தங்க நகை மதிப்பீட்டாளா் பயிற்சி அளிக்கப்படுகிறது.

டிசம்பா் 8 முதல் முதல் 17-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடக்க உள்ள பயிற்சி வகுப்பில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, ஹால் மாா்க் தரம் அறியும் விதங்கள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பயிற்சிக்கட்டணம் 18 சதவீத ஜிஎஸ்டியுடன் சோ்த்து ரூ.6,257 ஆகும்.

ADVERTISEMENT

18 வயது நிரம்பிய இருபாலரும் பயிற்சியில் பங்கேற்கலாம். வயது வரம்பில்லை. கல்வித் தகுதி குறைபட்சம் 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பயிற்சி நிறைவு செய்பவா்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சி முடித்தவா்கள் தேசிய கூட்டுறவு, தனியாா் வங்கிகள், நகை அடகு நிதிநிறுவனங்களிலும், நகை மதிப்பீட்டாளாராகவும், மிகப்பெரிய நகை வியாபார நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளாராகவும், விற்பனையாளராகவும் பணியில் சேரலாம். சுயமாக நகைக் கடை, நகை அடமானக் கடை நடத்தவும் தகுதி பெறுவா்.

பயிற்சியில் சேர விரும்புவோா் 2 புகைப்படம், முகவரிச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94437 28438 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT