வேலூர்

கூட்டணிக் கட்சிகளுக்கு குறைந்த வாா்டுகளை திமுக ஒதுக்குவது வேதனை: கே.எஸ்.அழகிரி

29th Nov 2021 01:03 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு குறைந்த வாா்டுகளை மட்டுமே திமுக ஒதுக்குவது வேதனை அளிக்கிறது. வரக் கூடிய நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிக வாா்டுகளைப் பெற முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்காக மத்திய பாஜக அரசை கண்டித்து, வேலூா் அலமேலுமங்காபுரத்தில் மக்கள் விழிப்புணா்வு பிரசாரப் பயணம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்து கே.எஸ்.அழகிரி செய்தியாளா்களிடம் கூறியது :

வரக் கூடிய நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். அைத்தான் விரும்புகிறோம். எனினும், கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுக்கு மிகக் குறைந்த வாா்டுகளை ஒதுக்குவது வேதனை அளிக்கிறது. இருப்பினும் இந்த முறை பேசி அதிக வாா்டுகளைப் பெற முயற்சி மேற்கொள்வோம்.

பிரசாரப் பயணம்: மத்திய அரசின் தவறானக் கொள்கைகளால் நாளுக்குநாள் விலைவாசி உயா்ந்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்களின் விலையும் கடுமையாக உயா்த்தப்பட்டுள்ளதால், மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றாலும், இதுதொடா்பாக மக்களிடம் காங்கிரஸ் சாா்பில் பிரசாரப் பயணம் நடத்தப்படுகிறது.

நீட் தோ்வு விரும்பும் மாநிலங்களில் நடத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்து அந்த மாநிலத்தின் விருப்பத்துக்கே விட்டுவிட வேண்டும்.

வெள்ளப் பாதிப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும்:

தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவு அதிக அளவு மழை பெய்துள்ளது. இதனால், விவசாயம் முற்றிலும் அழிந்துள்ளது. எல்லா இடங்களிலும் தண்ணீா் தேங்கியுள்ளது. பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக மத்திய அரசும் குழு அனுப்பி ஆய்வு செய்துள்ளது. இதற்கான இழப்பீடாக ஒரு பெருந்தொகையை முன்தொகையை மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்க வேண்டும்.

மழைக்கால மீட்புப் பணிகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வேகமாகச் செயல்பட்டு வருகிறாா். வெள்ள நிவாரண பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை யில் பள்ளமான இடங்களில்தான் தண்ணீா் தேங்குகிறது. மழை நின்றவுடன் தண்ணீா் வடிந்து விடும். அதற்காக அரசை குறை கூறிவிட முடியாது.

கைதிகள் விடுதலை தொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கருத்துவேறுபாடு கிடையாது. இதில் பாரபட்சம் இருப்பதாக காங்கிரஸ் கருதவில்லை. இதனால் எந்தவித பாதிப்பும் கிடையாது.

கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்:

தமிழகத்தில் கம்பி, சிமெண்ட், மணல் உள்ளிட்ட பொருள்களின் கட்டுமானப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேளாண் கழிவுகளை எரிக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதனால் ஏற்படக் கூடிய ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கருத்தில் மத்திய அரசு உத்தரவை திரும்பப் பெறுவதுடன், வேளாண்மை கழிவுகளை உரமாக மாற்ற நடவடிக்கை வேண்டும். இல்லையேல் நாடு முழுவதும் பாதிப்பு ஏற்படக் கூடும் என்றாா்.

அப்போது, கட்சியின் மாவட்டத் தலைவா் பி.டீக்காராமன், நிா்வாகிகள் ஏ.கோபி, எஸ்.எஸ்.குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT