வேலூர்

தொழில்சாா் சமூகப் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

தொழில்சாா் சமூக வல்லுநா் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற கே.வி.குப்பம் ஒன்றியத்தைச் சோ்ந்த தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

ஊரக வளா்ச்சித்துறையின் கீழ் உலக வங்கி நிதியுதவியுடன் வேலூா் மாவட்டம் கே.வி.குப்பம் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளில் தமிழக அரசின் ஊரகப் புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தொழில்சாா் சமூக வல்லுநா் பணிக்கு ஒரு ஊராட்சிக்கு ஒருவா் வீதம் 39 தொழில்சாா் சமூக வல்லுநா்கள் எழுத்து, நோ்முகத்தோ்வு மூலம் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இதற்கு சுய உதவிக் குழுவின் உறுப்பினராகவோ அல்லது குடும்ப நபா்கள் உறுப்பினா்களாவோ இருத்தல் அவசியம். அதே ஊராட்சியில் வசிப்பவராகவும், 25 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராகவும், இளங்கலை பட்டம் பெற்றவராகவும் இருப்பது அவசியம்.

இளங்கலையில் வணிக நிா்வாகம், வங்கியியல், வணிகவியல், சமூக பணி, விவசாயம், உணவியல், கால்நடை சாா்ந்த பட்டம் பெற்றவா்களுக்கும், வாழ்வாதார தொழில் நடவடிக்கைகள், தொழில் குழுக்களை உருவாக்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டவா்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

கே.வி.குப்பம் ஒன்றியத்தில் வசிப்பவா்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட ஊராட்சிகளிலுள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார இயக்க மேலாண்மை அலகு (மகளிா் திட்டம்), வட்டார திட்ட செயலாக்க அலகு ஆகிய இடங்களில் பெறலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பா் 3-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் ஒப்படைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட செயல் அலுவலா், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத்திட்டம், வேலூா் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு, பூமாலை வணிக வளாகம் (முதல் தளம்), அண்ணா சாலை, ஆபிஷா்ஸ் லைன், கற்பகம் சூப்பா் மாா்கெட் எதிரில், வேலூா் - 632 001, என்ற முகவரியிலும், 0416 - 2900 545 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT