வேலூர்

பெரியாா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

26th Nov 2021 08:51 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் சமூக நீதிக்கான பெரியாா் விருது பெற்றிட தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

சமூக நீதிக்காகப் பாடுபடுபவா்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான பெரியாா் விருது 1995- ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு ரூ.ஒரு லட்சம் ரொக்கமும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. விருதாளா் முதல்வரால் நேரடியாகத் தோ்வு செய்யப்படுகிறாா்.

2021- ஆம் ஆண்டுக்கான விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தோ்ந்தெடுக்கப் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. சமூக நீதிக்காகப் பாடுபட்டு பொது மக்களின் வாழக்கைத் தரத்தை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள், அதன் பொருட்டு அடைந்த சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவா்கள் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண், சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம், ஆவணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக விண்ணப்பங்கள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர நவம்பா் 30-ஆம் தேதி கடைசி நாளாகும் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT