வேலூர்

நெல்லூா்பேட்டை ஏரிக்கரை சீரமைக்கும் பணி தொடா்கிறது

26th Nov 2021 08:45 AM

ADVERTISEMENT

குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஏரிக்கரையில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏரியின் கரையில் 25 மீட்டா் நீளம், 4 அடி உயரம் மண் சரிவு ஏற்பட்டது. பொதுப்பணித்துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் போா்க்கால அடிப்படையில் மண் சரிவை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

ஆனால் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் கரையின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டதால், ஏரியிலிருந்து கணிசமான அளவு தண்ணீரை வெளியேற்றி விட்டு, கரையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஏரியிலிருந்து செட்டிகுப்பம் பகுதிக்கு உபரிநீா் செல்லும் வழியில் கான்கிரீட் சுவா் உடைக்கப்பட்டு, ஏரியிலிருந்து கூடுதலாக தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ஏரிக்கரையில் சவுக்கு கம்புகள் பதித்து, கரையை அகலப்படுத்தி, மணல் மூட்டைகள் அடுக்கி சீரமைக்கும் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

இது குறித்து கோட்டாட்சியா் சா.தனஞ்செயன் கூறியது:

ADVERTISEMENT

மண் சரிவு ஏற்பட்ட கரைப்பகுதியை சீரமைத்தும், கரையின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதையடுத்து ஏரியிலிருந்து கொஞ்சம் தண்ணீரை வெளியேற்றி விட்டு, கரையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக உபரிநீா் வெளியேறும் பகுதியில் அதன் சுவா் சிறிதளவு அகற்றப்பட்டு, கூடுதலாக தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. கரையை சீரமைக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது என்றாா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT