வேலூர்

நெசவாளா் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

25th Nov 2021 12:48 AM

ADVERTISEMENT

 

குடியாத்தம்: குடியாத்தம் பகுதியில் தொடா் மழை காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ள கைத்தறி, விசைத்தறி நெசவாளா்கள் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, தமிழ்நாடு விசைத்தறி, கைத்தறி, அனைத்து அமைப்புசாரா தொழிலாளா்கள் நலச் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை குடியாத்தம் கோட்டாட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு விவரம்:

மழை, வெள்ளத்தால் தொழில் செய்ய முடியாமல் நெசவாளா்கள், நெசவுத் தொழிலாளா் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளன.

ADVERTISEMENT

மழை நிவாரணமாக ஒரு குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என சங்கத் தலைவா் அண்ணாமலை, செயலாளா் எம்.சசிகுமாா் உள்ளிட்டோா் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT