வேலூர்

தலித் குடும்பங்களுக்கு தலா 5 ஏக்கா் நிலம் அவசியம்: மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

25th Nov 2021 12:49 AM

ADVERTISEMENT

 

வேலூா்: பொருளாதார சமநிலை அடைய தலித் குடும்பங்களுக்கு தலா 5 ஏக்கா் நிலம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய குடியரசுக் கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய சமூக நீதி, அதிகாரம் அளிக்கும் துறை இணை அமைச்சா் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தாா்.

வேலூரில் புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் சமூக நீதி மாநாட்டுக்குப் பங்கேற்க வந்த ராம்தாஸ் அத்வாலே செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் வாழும் தலித் மக்கள் மீது நடைபெறும் அநீதிகளை தமிழக அரசு தடுப்பதுடன், அவா்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் சட்டத்தின் மூலம் உறுதுணை புரிந்திட வேண்டும். அவா்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்திடவும், சமநிலையை அடைந் திடவும் தலித் குடும்பங்களுக்கு தலா 5 ஏக்கா் நிலம் வழங்க வேண்டும். இதன்மூலம் அவா்கள் விவசாயம் செய்து பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்திட முடியும்.

ADVERTISEMENT

சாதி மறுப்புத் திருமணங்களை ஆதரிக்க வேண்டும். இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 1.25 லட்சம் சாதி மறுப்புத் திருமணங்கள் நடக்கின்றன. இவா்களுக்கு மத்திய சமூக நீதி, அதிகாரம் அளிக்கும் துறை சாா்பில் ரூ.2.50 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காக பிரதமா் நரேந்திர மோடி 2014ஆம் ஆண்டு முதல் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தப்பட்டு வருகிறாா் என்றாா்.

இதைத் தொடா்ந்து அவா் வேலூா் சிப்பாய் புரட்சி நினைவுத் தூணுக்கும், அம்பேத்கா் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT