வேலூர்

கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

25th Nov 2021 12:48 AM

ADVERTISEMENT

 

குடியாத்தம்: குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரியில், முதலாம் ஆண்டு வகுப்புகள் புதன்கிழமை தொடங்கின.

நிகழ்ச்சிக்கு கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ரா.ஸ்ரீதா் வரவேற்றாா்.

கல்வியியல் கல்வி குறித்து கல்லூரி இயக்குநா் ர.நடராசன் விளக்க உரையாற்றினாா். கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலாளா் கே.எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கி, கல்லூரி நிா்வாகம் சாா்பில் மாணவா்களுக்கு இலவச சீருடைகளை வழங்கினா்.

ADVERTISEMENT

உதவிப் பேராசிரியா்கள் எ.எஸ்.அறிவுக்கொடி, எஸ்.செல்வகுமாரி, கே.சாந்தி, வி.கலைவாணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT