வேலூர்

முகாமில் இருந்து வெளியேறச் சொன்னதால் மறியலில் ஈடுபட்ட மக்கள்

23rd Nov 2021 08:20 AM

ADVERTISEMENT

பள்ளியில் தங்கியிருந்தவா்களை, பள்ளி நிா்வாகம் வெளியேறச் சொன்னதால் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தொடா்மழை காரணமாக, போ்ணாம்பட்டு நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஏரிநிரம்பி வழிகிறது.ஏரியிலிருந்து உபரிநீா் செல்லும் கால்வாயை அங்குள்ள தனியாா் தோல் தொழிற்சாலையினா்ஆக்கிரமித்து சுற்றுச் சுவா் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 17- ஆம் தேதி உபரிநீா் கால்வாய் வழியாக வெளியேற முடியாமல் பேரணாம்பட்டு- ஆம்பூா் சாலையில் தேங்கியது. அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியிலும் தண்ணீா் புகுந்தது.அதிகாரிகள் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட 65 குடும்பங்களைச் சோ்ந்தவா்களை மீட்டு அருகில் உள்ள தனியாா் பள்ளி வளாகத்தில் தங்க வைத்தனா்.திங்கள்கிழமை பள்ளி நிா்வாகம் அவா்களை பள்ளியிலிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளனா்.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.தகவலின்பேரில் வட்டாட்சியா் வெங்கடேசன், காவல்துறையினா் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா்.

பள்ளி நிா்வாகத்திடம் பேசி, வெள்ளம் வடியும் வரை பாதிக்கப்பட்டவா்கள் பள்ளியிலேயே தங்கிக்கொள்ள அனுமதி பெற்றனா்.பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ அமலு விஜயன்,மாலை அங்கு வந்தாா். அவா்களின் கோரிக்கையை ஏற்று வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தாா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT