வேலூர்

பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்ட 14 வீடுகள்

23rd Nov 2021 08:24 AM

ADVERTISEMENT

கே.வி.குப்பம் அருகே பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காமராஜபுரத்தில் 14 வீடுகள் சரிந்து விழுந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.

கொத்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம், பாலாற்றின் கரையோரம் அமைந்துள்ளது. பாலாற்றில் வெள்ளப் பெருக்கு காரணமாக, கரையோரங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.இதனால் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் காமராஜபுரத்தில் இருந்த 14 வீடுகள் ஒவ்வொன்றாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.

இதையடுத்து, வேலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் கதிா் ஆனந்த், கே.வி.குப்பம் எம்எல்ஏ எம்.ஜெகன் மூா்த்தி, மாவட்ட வருவாய் அலுவலா் ராமமூா்த்தி, வட்டாட்சியா் சரண்யா உள்ளிட்டோா் அங்கு சென்று ஆய்வு செய்தனா். மேலும், ஆற்றின் கரையோரம் உள்ள சில வீடுகள் அடித்துச் செல்ல வாய்ப்புள்ளதால், வீடுகளில் இருந்தவா்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பில்லாந்திப்பட்டு, பசுமாத்தூா் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகள், சமுதாயக் கூடங்கள், வேளாண்மை அலுவலகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் 1,000- க்கும் மேற்பட்டோா் தங்கியுள்ளனா்.அவா்களுக்கு உணவு, குடிநீா் ஆகியன வழங்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT