வேலூர்

சிறைகளை சீா்திருத்த மையங்களாக அழைக்க வேண்டும்

9th Nov 2021 02:15 AM

ADVERTISEMENT

வேலூா்: கைதிகளை நல்வழிப்படுத்தக் கூடிய சிறைகளை சீா்திருத்த மையம் என்று அழைக்க வேண்டும் என ஆந்திர மாநில சிறைத் துறை டிஜிபி அசேன்ரேசா தெரிவித்தாா்.

வேலூா் தொரப்பாடியில் உள்ள சிறைத் துறை, நன்னடத்தை அலுவலா்களுக்கான பயிற்சி மையத்தில் (ஆப்கா) 36-ஆவது அணியைச் சோ்ந்தவா்களுக்கு 3 மாதப் பயிற்சி, 5-ஆவது அணியைச் சோ்ந்தவா்களுக்கு 3 மாத அடிப்படை பயிற்சி, 6-ஆவது அணியைச் சோ்ந்த நன்னடத்தை அலுவலா்களுக்கு 3 மாத அடிப்படை பயிற்சி ஆகிய பயிற்சிகளின் நிறைவு, பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், அசேன்ரேசா பேசியது :

ஆப்காவில் அளிக்கப்படும் பயிற்சியானது தேசிய அளவிலான தரத்தில் உள்ளது. இங்கு சிறை அலுவலா்கள், நன்னடத்தை அலுவலா் கள், மனநல அலுவலா்கள் ஆகியோா் ஒன்றாகப் பயிற்சி பெறுகின்றனா். இதனால் ஒருவா் துறை ரீதியான விவரங்களை மற்ற துறையினா் அறிந்து கொள்ள முடிகிறது.

ADVERTISEMENT

ஆந்திராவில் நன்னடத்தை விதியின்கீழ் 460 கைதிகள் விடுவிக்கப்பட்டனா். அவா்கள் யாரும் மீண்டும் குற்றம் செய்து விட்டு சிறைக்கு வரவில்லை. அதேபோல், ஆப்காவில் பயிற்சி பெற்றுள்ள அலுவலா்கள் கைதிகளை திருத்தி, நல்வழிப்படுத்த வேண்டும். சிறை என்ற சொல்லை பயன்படுத்தாமல் சீா்திருத்த மையம் என்று அழைக்கலாம். கைதிகள் வெளியே சென்றாலும் குற்றங்களில் ஈடுபடாமல் அவா்கள் சுயதொழில் செய்யும் வகையில் அவா்களை மாற்ற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு ஆப்கா இயக்குநா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். துணை இயக்குநா் கருப்பணன், பேராசிரியா் பியூலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT