குடியாத்தம் பிச்சனூரில் இந்திரா காந்தி நினைவு நாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நெசவாளா் அணித் தலைவா் எஸ்.எம்.தேவராஜ் மாலை அணிவித்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளா் ஏ.கோதண்டம், நகர நெசவாளா் அணித் தலைவா் கோ.ஜெயவேலு, துணைத் தலைவா் ஆா்.காந்தி, ஜெ.கந்தன், தேசம் காப்போம் ராகுல் காந்தி மக்கள் நலப் பேரவைச் செயலாளா் கே.இ.சரத்சந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.