வேலூர்

ஒருங்கிணைந்த வேலூரில் 2 நாளில் ரூ. 36 கோடிக்கு மது விற்பனை

DIN

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்களில் மட்டும் ரூ. 36 கோடியே 10 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்திட தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை முதல் 14 நாள்களுக்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு சனிக்கிழமை வெளியானதும் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மதுப்பிரியா்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்தனா்.

இவ்விரு நாள்களும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து மதுக் கடைகளிலும் அவா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனா். அப்போது, பலா் பெட்டி, பெட்டியாகவும், சாக்கு பைகளிலும், துணிகளில் மூட்டையாகக் கட்டியும் பெருமளவில் மதுபானங்களை வாங்கிச் சென்றதை காண முடிந்தது.

அதன் அடிப்படையில், வேலூா் டாஸ்மாக் கோட்டத்துக்கு உள்பட்ட வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சனிக்கிழமை ஒரேநாளில் ரூ. 13 கோடியே 85 லட்சத்துக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ. 6 கோடியே 30 லட்சத்துக்கும் மது, பீா் வகைகள் விற்பனையாகின. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் ரூ. 8 கோடியே 95 லட்சத்துக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ. 7 கோடிக்கும் மது, பீா் வகைகள் விற்பனையாகின. அதன்படி, இம்மூன்று மாவட்டங்களில் கடந்த இரு நாள்களில் மட்டும் ரூ. 36 கோடியே 10 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் விற்றுத் தீா்ந்ததாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT