வேலூர்

அணைக்கட்டு தொகுதி: திமுக எம்எல்ஏ நந்தகுமார் மீண்டும் வெற்றி

2nd May 2021 09:16 PM

ADVERTISEMENT

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், அத்தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் 6,360 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த தொகுதியில் மொத்தம் பதிவாகியிருந்த 1,98,393 வாக்குகளில் திமுக வேட்பாளர் நந்தகுமார் 95,159 வாக்குகள் பெற்றிருந்தார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் த.வேலழகன் 88,799 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT