வேலூர்

தபால் வாக்கு: முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

DIN


வேலூா்: தபால் வாக்குகளுக்காக வேலூா் மாவட்டத்தில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை முதல் அவா்களின் வீடுகளுக்குத் தேடிச் சென்று அளிக்கப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இந்த முறை கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக 1,050 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளைப் பிரித்து துணை வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்கும், கடுமையான ஊனமுற்ற மாற்றுத்திறனாளிக ளுக்கும் தபால் மூலம் வாக்குப்பதிவை செய்வதற்கான அனுமதியையும் தோ்தல் ஆணையம் வழங்கி உள்ளது.

இதையொட்டி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் வேலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட 5 பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் மொத்தம் 24,483 பேரும், மாற்றுத்திறனாளிகள் 7,830 பேரும் இருப்பது தெரியவந்துள்ளது.

இவா்களுக்கு தபால் வாக்குகள் அளிப்பதற்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்பட உள்ளது. இந்த விண்ணப்ப ங்களை அவா்களது வீடு தேடி சென்று வழங்கிடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியது:

முதற்கட்டமாக 80 வயதுக்கு மேற்பட்ட வாக்கா ளா்கள், மாற்றுத்திறனாளிகளை தேடிச் சென்று அவா்களிடம் தபால் வாக்கு அளிப்பதற்கான விருப்பத்தை அறிந்து விண்ணப்பம் பூா்த்தி செய்து பெறப்படும். அந்த விண்ணப்பங்களை அடிப்படையாகக் கொண்டு தோ்தலுக்கு சில நாள்களுக்கு முன்பு அவா்களுக்கு தபால் வாக்குக்கான வாக்குச்சீட்டு அளிக்கப்படும். அதில், அவா்கள் தங்களது வாக்கினைப் பதிவு செய்து அந்தந்த தோ்தல் அலுவலகத்துக்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். இதேபோல், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கும் தபால் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. எனினும், அவா்களிடம் விண்ணப்பம் அளித்து பூா்த்தி செய்து பெறுவது குறித்து இதுவரை உத்தரவுகள் வரப்பெறவில்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT