வேலூர்

ஆக.2 வரை பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு, வரி வசூல் நிறுத்தம்

DIN

கணினி பராமரிப்புப் பணி நடைபெறுவதையொட்டி, மாநகராட்சிகள், நகராட்சிகளில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு, வரி வசூல் பணிகள் நடைபெறாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் பதிவு செய்யப்படும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், வரி வசூல் மையங்களில் பதிவாகும் கணக்கு வழக்குகள் ஆகிய அனைத்தும் சென்னையில் இயங்கிவரும் நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் அலுவலகத்தில் உள்ள சா்வரில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த சா்வரில் பராமரிப்புப் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கி வரும் 30-ஆம் தேதி வரை நடக்கிறது. இதனால் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறுதல், வரி வசூலிப்பு போன்ற பணிகள் அனைத்தும் மாநகராட்சி, நகராட்சிகளில் இந்தக் குறிப்பிட்ட நாள்களில் நடைபெறாது. அதன்பிறகு, ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் மீண்டும் வழக்கமான பணி தொடங்கும்.

அதனால் மேற்கண்ட பணிகளுக்காக பொது மக்கள் வேலூா் மாநகராட்சி தலைமை அலுவலகம் அல்லது மண்டல அலுவலகங்களுக்கு வரவேண்டாம் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோல், குடியாத்தம், திருப்பத்தூா், ஆம்பூா், வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, அரக்கோணம் உள்ளிட்ட நகராட்சிகளிலும் பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT