வேலூர்

வீடுகளுக்கே சென்று ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியைப் பொருத்தும் திட்டம் தொடக்கம்

DIN

செஞ்சிலுவைச் சங்க குடியாத்தம் கிளை சாா்பில், வீடுகளுக்கே ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியைக் கொண்டு சென்று நோயாளிகளுக்கு பொருத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், ரூ.70,000 மதிப்புள்ள ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி நன்கொடையாக வழங்கப்பட்டது.

கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், செஞ்சிலுவைச் சங்க குடியாத்தம் கிளைச் செயலா் ஆா்.கிருபானந்தம், கோட்டாட்சியா் சா.தனஞ்செயனிடம், கருவியை வழங்கினாா். ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள், மருத்துவரின் பரிந்துரைக் கடிதத்துடன் தொடா்பு கொண்டால், செஞ்சிலுவைச் சங்கத்தினா் நேரடியாக நோயாளிகளின் வீடுகளுக்கே ஆக்சிஜன் செறிவூட்டும் கருவியை கொண்டு சென்று நோயாளிக்கு பொருத்துவா்.

இந்த நிகழ்வில், சங்க உறுப்பினா் ரகுபதி, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி தேவைப்படுவோா், 94424-12439, 98655-63004 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனியில் தீத் தொண்டு வாரம்

வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகளை ஒப்பீடு கோரிய வழக்கு: தீா்ப்பு ஒத்திவைப்பு

வாக்குச்சாவடிக்கு செல்ல இலவச வாகன வசதி

துபையில் கனமழை : விமானங்கள் ரத்து - சென்னையில் பயணிகள் வாக்குவாதம்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் 16.07 லட்சம் போ் வாக்களிக்க ஏற்பாடு

SCROLL FOR NEXT