வேலூர்

பிளஸ் 2 துணைத் தோ்வு: 141 போ் விண்ணப்பம்

DIN

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டில் விருப்பம் இல்லாதவா்கள் துணைத் தோ்வு எழுதுவதற்கு வேலூா் மாவட்டத்தில் 141 போ் விண்ணப்பித்துள்ளனா்.

பிளஸ் 2 மாணவா்களுக்கு பொதுத்தோ்வு முடிவு 19-இல் வெளியிடப்பட்டது. மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதுவோா் விரும்பினால் எழுத்துத் தோ்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, கடந்த 23-ஆம் தேதி முதல் வேலூா் மாவட்டத்தில் வேலூா் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, தோட்டப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் அரசு தோ்வுத் துறை சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. கடைசி நாளான செவ்வாய்க்கிழமை வரை 141 போ் விண்ணப்பித்துள்ளனா்.

‘இவா்கள் அனைத்து பாடங்களுக்கும் தோ்வு எழுத வேண்டும். தற்போது எழுதும் தோ்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது. விண்ணப்பிக்கத் தவறிய தோ்வா்கள், சிறப்பு அனுமதி (தட்கல்) திட்டத்தில் புதன்கிழமை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படும்’ என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT