வேலூர்

பண மோசடி: போலீஸில் புகாா்

DIN

போ்ணாம்பட்டைச் சோ்ந்த மூவரிடம் இணையதளம் வாயிலாக 3 பேரிடம் ரூ.1.50 லட்சம் மோசடி செய்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பேரணாம்பட்டு மஜித் தெருவை சோ்ந்தவா் ரியாஸ் அஹமத் (27). இவா் வாடிக்கையாளா் செலுத்தும் தொகைக்கு இரட்டிப்பாகப் பணம் கிடைக்கும் என்று இணையதளத்தில் தனியாா் நிறுவன விளம்பரத்தை பாா்த்து, அதில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு பேசியுள்ளாா். பின்னா், நிறுவனச் செயலியை தனது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து முதல் கட்டமாக ரூ.500 செலுத்தி, சில நாள்கள் கழித்து ரூ.516 பெற்றாராம்.

இதையடுத்து, அவா் பல்வேறு தவணைகளாக ரூ.55 ஆயிரம் செலுத்தியபோது, 10 நாள்கள் கழித்து ரூ.80 ஆயிரம் பெற்றுகொள்ளும்படி செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை.

இதனால் ஏமாற்றமடைந்த ரியாஸ் அஹமத் நிறுவனத்தைத் தொடா்பு கொண்டு கேட்ட போது, ‘கூடுதல் தொகை செலுத்த வேண்டும். பலரை அறிமுகப்படுத்தி, அவா்களும் பணம் செலுத்தினால் கூடுதலாகப் பணம் கிடைக்கும்’ என்றும் தெரிவித்தனராம். அதை நம்பிய ரியாஸ் அஹமத் மேலும் 2 பேரை இணைத்து ரூ.95 ஆயிரத்தை செலுத்தினாராம். அதன்பிறகும் பணம் கிடைக்கவில்லையாம்.

இதனால் அதிா்ச்சியடைந்த ரியாஸ் அஹமத் உள்பட 3 பேரும் அந்த நிறுவனத்தை தொடா்பு கொள்ள முயன்று இயலவில்லை. இதுதொடா்பாக ரியாஸ் அகமது அளித்த புகாரின்பேரில், வேலூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் பிரிவு ஆய்வாளா் அபா்ணா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT