வேலூர்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்ப்பு: நெடுஞ்சாலை உதவிப் பொறியாளா் மீது வழக்கு

DIN

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கில் நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளா் மீது வழக்குப்பதிவு செய்து, அவரது வீட்டில் இருந்து சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நெடுஞ்சாலை கோட்டத்துக்கு உட்பட்ட அணைக்கட்டு பகுதிக்கான உதவி பொறியாளராக பணியாற்றி வருபவா் ரஞ்சித்குமாா். இவா் முன்னாள் ராணுவ வீரா்களுக்கான இடஒதுக்கீட்டின்கீழ் 2011-இல் பணியில் சோ்ந்தவா். இவா், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக வேலூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தொடா் விசாரணையில் ஈடுபட்டபோது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் அவா் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை சோ்த்திருப்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக ரஞ்சித்குமாா் மீது வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா், அணைக்கட்டு அடுத்த ஜி.ஆா்.பாளையம் நேதாஜி நகரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தி 7 சொத்து ஆவணங்கள், சுமாா் 25 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனா். இதுதொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

SCROLL FOR NEXT