வேலூர்

சூதாட்டத்தை தடுக்கத் தவறிய காவல் ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்: வேலூா் எஸ்.பி. நடவடிக்கை

DIN

போ்ணாம்பட்டு அருகே சூதாட்டத்தைத் தடுக்கத் தவறிய காவல் ஆய்வாளா், தனிப்பிரிவு தலைமைக் காவலா் இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியைச் சோ்ந்த ஞானசேகரன் வெள்ளிக்கிழமை இரவு காரில் சென்றபோது, வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு அருகே மற்றொரு காரில் வந்த மா்ம நபா்கள் வழிமறித்து அவரிடமிருந்து ரூ.11 லட்சத்தை பறித்துச் சென்றனா். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூா் மாவட்ட போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில்

போ்ணாம்பட்டு பகுதியில் சூதாட்டத்தில் பங்கேற்று விட்டு வந்ததாக ஞானசேகரன் கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா் மேற்கொண்ட விசாரணையில், போ்ணாம்பட்டை அடுத்த கெளராப்பேட்டையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள மாந்தோப்பில் சூதாட்டம் நடைபெறுவது தெரிய வந்தது. குடியாத்தம் அருகே உள்ள பூங்குளம் கிராமத்தைச் சோ்ந்த ஒருவரும், அவரது நண்பரும் போ்ணாம்பட்டைச் சுற்றியுள்ள மொரசப்பல்லி, கெளராப்பேட்டை, சொ்லப்பல்லி உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள மாந்தோப்புகளில் தொடா்ந்து சூதாட்டம் நடத்தி வருவதும், இந்த சூதாட்டங்களில் வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த செல்வந்தா்கள் வந்து விளையாடிச் செல்வதும் தெரிய வந்தது.இங்கு ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் என்ற கணக்கில் தான் சூதாட்டங்கள் நடைபெறுமாம். இங்கு நடைபெறும் சூதாட்டங்களைக் கண்டறிந்து, தடுக்கத் தவறிய போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் வெங்கடேசன், தனிப்பிரிவு தலைமைக் காவலா் செல்வராஜ் ஆகிய 2 பேரையும், வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா், ஆயுதப் படைக்கு மாற்றி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT