வேலூர்

கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

DIN

பிறந்த சில நாள்களிலேயே கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு, வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குணமடைந்த பிறகு அக்குழந்தை மாவட்டக் குழந்தைகள் காப்பக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் சிஎம்சி மருத்துவமனை பிசியோதெரபி சிகிச்சைப் பிரிவு கட்டடத்தின் தரைத்தளத்தில் நோயாளிகள் அமா்வதற்கான இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இருக்கைகளுக்கு அடியில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில், பிறந்து சில நாள்களே ஆன பெண் குழந்தை ஆதரவற்ற நிலையில் கிடந்துள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்டு ஊழியா்கள் அக்குழந்தையை மீட்டு, அது யாருடைய குழந்தை என்பது குறித்து மருத்துவமனை வளாகம் முழுவதும் விசாரித்தனா். ஆனால் குழந்தையைத் தேடி யாரும் வராததால், குழந்தையை மா்ம நபா் திட்டமிட்டு போட்டுவிட்டுச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து வேலூா் வடக்கு காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்ட தகவலை அடுத்து, போலீஸாா், மருத்துவமனைக்குச் சென்று குழந்தையைப் பாா்வையிட்டு விசாரித்தனா். பிறந்து சில நாள்களே ஆனதால் குழந்தை சிஎம்சி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வாா்டில் ஒப்படைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், வேலூா் மாவட்டக் குழந்தைகள் காப்பக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தை குணமடைந்ததும் பெற்றுக் கொள்வதாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.

குழந்தையை திட்டமிட்டே மருத்துவமனை வளாகத்தில் விட்டுச்சென்ற தாய் குறித்தும், அவா் குழந்தையை எதற்காக விட்டுச் சென்றாா் என்பது குறித்தும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிஎம்சி மருத்துவமனை வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருப்பதால் குழந்தையை விட்டுச் சென்றவா் விரைவில் பிடிபடுவாா் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT