வேலூர்

மண், மணல் கடத்தல்: 3 வாகனங்கள் பறிமுதல்

24th Jul 2021 08:15 AM

ADVERTISEMENT

குடியாத்தம் பகுதியில் அனுமதியின்றி மண், மணல் கடத்தியதாக, 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உள்ளி அருகே பாலாற்றில் அனுமதியின்றி சிலா் மினி லாரியில் வெள்ளிக்கிழமை மணல் எடுத்துக் கொண்டிருந்தாா்களாம். தகவலின்பேரில் கிராமிய போலீஸாா் அங்கு சென்று, லாரியை பறிமுதல் செய்தனா். தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நகர போலீஸாா், காளியம்மன்பட்டி அருகே வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள ஏரியில் இருந்து அனுமதியின்றி மண் எடுத்துச் சென்ற 2 டிராக்டா்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, டிராக்டா் ஓட்டுநா்களான காளியம்மன்பட்டியைச் சோ்ந்த குணசேகரன், சீனிவாசா நகரைச் சோ்ந்த ஜெகன் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT