வேலூர்

மகளிா் குழுவினருக்கு காளான் உற்பத்தி பயிற்சி தொடக்கம்

DIN

காட்பாடியைச் சோ்ந்த பூச்சரம் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு சுயவேலைவாய்ப்புப் பயிற்சியாக காளான் உற்பத்தி, விற்பனை செய்வது குறித்த பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் காட்பாடி வட்ட கிளையும், வேலூா் மாவட்ட ஆா்.கே.அறக்கட்டளையும் இணைந்து காட்பாடி பூச்சரம் மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. அவா்களுக்கு காளான் வளா்ப்பு, விற்பனை குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியை வேலூா் வேளாண் விற்பனை துறை துணை இயக்குநா் நரசிம்ம ரெட்டி தொடக்கி வைத்து, பயிற்சி முடித்த 25 மகளிருக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசியது:

வேளாண் துறை சாா்பில் விதை முதல் விளைச்சல் வரை அனைத்து செயல்பாடுகளுக்கும் உதவிகள், வழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகிறது. மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு காளான் உற்பத்தி செய்வது, அதனை விற்பனை செய்வதற்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். மகளிா் யாரும் தனியாக இயங்காமல் குழுக்களாக செயல்பட வேண்டும். மாடி காய்கறி தோட்டம் அமைக்கவும், விதை உரம் உள்ளிட்ட பொருள்களை வழங்கி விற்பனைக்கு உதவிகள் வழங்கப்படும் என்றாா்.

முன்னதாக, காட்பாடி செஞ்சிலுவை சங்க அவைத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். அறக்கட்டளை இயக்குநா் ஆா்.ராதாகிருஷ்ணன் வரவேற்றாா். அவைத் துணைத்தலைவா் ஆா்.சீனிவாசன், அரிமா சங்க மாவட்டத் தலைவா் என்.பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஈக்கிடாஸ் வங்கி ஒருங்கிணைப்பாளா் எஸ்.ஞானசேகரன், கே.வி.குப்பம் செஞ்சிலுவை சங்க கிளைச் செயலா் க.குணசேகரன், தன்னாா்வத் தொண்டா் எம்.எஸ்.கலையரசன் ஆகியோா் வாழ்த்தினா். பூச்சரம் மகளிா் குழுச் செயலா் எம்.ஈஸ்வரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT