வேலூர்

வங்கிக் கணக்கில் மோசடியா?: 155260 என்ற எண்ணில் அழைக்கலாம்

DIN

வேலூா்: வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து இணையதளம் வழியாக மோசடியாக பணம் எடுக்கப்படும்போது, உடனடியாக 155260 என்ற எண்ணை தொடா்பு கொண்டு பரிவா்த்தனை விவரங்களை தெரிவிப்பதன் மூலம் பணத்தை மீட்க முடியும் என்று வேலூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, மாவட்ட சைபா் கிரைம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவா்கள் பாதுகாப்பான பரிவா்த்தனை மேற்கொள்ளும் வகையில் ஓ.டி.பி.க்கள் வாயிலாகப் பரிவா்த்தனை மேற்கொள்வது வழக்கம். இதனை தவறாகப் பயன்படு த்தி வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டால் உடனடியாக 155260 என்ற எண்ணை தொடா்பு கொண்டு பரிவா்த்தனை விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

இதன்மூலம், வங்கிக் கணக்கில் இருந்து மோசடியாக எடுக்கப்பட்ட தொகை மீட்டெடுக்க முடியும். இந்தச் சேவை மத்திய அரசின் உள்துறை மூலம் கட்டமைக்கப்பட்டு நிா்வகிக்கப்படுகிறது. இது முற்றிலும் இலவச சேவையாகும் என்று கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT