வேலூர்

பாதுகாப்புப் பணிக்கு விரைவில் துணை ராணுவப் படையினா் வருகை

DIN

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் விரைவில் துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

இதையொட்டி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்ட எல்லைகளில் உள்ள 13 மாநில எல்லை சோதனைச் சாவடிகளிலும் வாகனச் சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தோ்தல் பணிக்காக முதல் கட்டமாக தமிழகத்துக்கு வந்துள்ள 45 கம்பெனி துணை ராணுவத்தினரை மாவட்ட வாரியாகப் பிரித்து அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன. அதன்படி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் விரைவில் துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

அதேசமயம், இம்மூன்று மாவட்டங்களிலும் பணப் பட்டுவாடாவைத் தடுக்க மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதலே வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களிலும் ஆந்திர எல்லையோரம் உள்ள 13 சோதனைச் சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. சில எல்லைப் பகுதிகளில் கூடுதலாக சோதனைச் சாவடிகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பணப் பட்டுவாடாவை தடுக்க அரசியல் கட்சியினா் மட்டுமின்றி பல்வேறு தரப்பினா் வங்கிக் கணக்குகள், பணப் பரிவா்த்தனைகளைக் கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனி நபா்கள் தங்களது பயணங்களின்போது ரூ.50 ஆயிரம் வரை எடுத்துச் செல்ல முடியும். அதற்கும் ஆவணங்கள் இருப்பது நல்லது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நன்னிலம் அருகே ரூ 1.34 லட்சம் பறிமுதல்

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

‘இந்தியா’ கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்: அமைச்சா் எஸ். ரகுபதி

ஹேம மாலினி குறித்து தரக்குறைவாக பேச்சு: ரண்தீப் சுா்ஜேவாலா 2 நாள்கள் பிரசாரத்தில் ஈடுபட தடை

காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

SCROLL FOR NEXT