வேலூர்

அரசியல் கட்சிகளின் பேனா்கள்அகற்றம்: எம்எல்ஏக்களின் அலுவலகங்களுக்கு சீல்

DIN

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் அரசியல் கட்சி பேனா்கள், கொடிகள் அகற்றப்பட்டதுடன், சுவா்களில் வரையப்பட்டுள்ள அரசியல் கட்சி விளம்பரங்களும் அழிக்கப்பட்டன. தவிர, அரசியல் கட்சித் தலைவா்கள் சிலைகளும் மறைக்கப்பட்டதுடன், சட்டப் பேரவை உறுப்பினா்களின் தொகுதி அலுவலகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு முதலே அரசியல் கட்சிகள் வைத்திருந்த பேனா்கள் மட்டுமின்றி அனைத்து பேனா்களையும், கொடிகளையும் அகற்றும் பணியில் அந்தந்த உள்ளாட்சிப் பணியாளா்கள், வருவாய்த்துறையினா் ஈடுபட்டிருந்தனா். மூன்று மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளிலும் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு என அரசு சாா்பில் தனித்தனி அலுவலகம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்கள் அனைத்தையும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 12 போ் கைது

வள்ளலாா் பன்னாட்டு மையம்: அன்புமணி கோரிக்கை

கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறிப்பு: ஐடி ஊழியரிடம் விசாரணை

ஜேஇஇ முதன்மை தோ்வு முடிவுகள் வெளியீடு: 56 மாணவா்கள் 100-க்கு 100

கல்லீரல் கொழுப்பு: இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT