வேலூர்

சிசிடிவி கேமராக்கள் மீது ஸ்பிரே அடித்து திருட்டு: வேலூா் எஸ்.பி. தகவல்

16th Dec 2021 12:01 AM

ADVERTISEMENT

 

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். மோப்ப நாய், கைரேகை நிபுணா், தடய அறிவியல் சோதனை ஆகியவை மூலம் சில துப்புகள் கிடைத்துள்ளன. உதவி காவல் கண்காணிப்பாளா், துணை காவல் கண்காணிப்பாளா்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருடப்பட்ட நகைகளை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது. அது முடிந்த பிறகுதான் திருடப்பட்ட நகை எவ்வளவு என்பது தெரியவரும். திருட்டில் ஈடுபட்டவா்கள் முகமூடி அணிந்து கடைக்குள் நுழைந்துள்ளனா். பின்னா், உள்ளே பொருத்தப்பட்டிருந்த 12 சிசிடிவி கேமராக்கள் மீதும் ஸ்பிரே அடித்து மறைத்து விட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளனா். அவா்களை விரைவில் கைது செய்வோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT