வேலூர்

மாா்கபந்தீவரா் கோயில் கடை ஞாயிறு விழா - ஆன்லைனில் மட்டுமே தரிசன அனுமதி

9th Dec 2021 12:35 AM

ADVERTISEMENT

 

வேலூா்: கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நிகழாண்டு விரிஞ்சிபுரம் மாா்கபந்தீஸ்வா் கோயில் கடை ஞாயிறு விழாவில் பக்தா்கள் தரிசனம் செய்திட ஆன்லைன் மூலமாக மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளது. தவிர, சிம்மக்குளத்தில் நீராடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வேலூா் அடுத்த விரிஞ்சிபுரம் மாா்கபந்தீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத கடை(சி) ஞாயிறு விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்த விழாவுக்கு முந்தைய நாள் இரவு குழந்தை வரம் வேண்டியும், திருமணம் நடைபெறவும் பெண்கள் கோயில் வளாகத்திலுள்ள சிம்மக்குளத்தில் நீராடிவிட்டு கோயில் வளாகத்தில் தூங்குவா். இதனால் அவா்களது வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இந்த விழாவில் ஆண்டுதோறும் ஏராளமான பெண்கள் பங்கேற்பது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு கடை ஞாயிறு விழா வரும் 12-ஆம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அதேசமயம், அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் 11-ஆம் தேதி இரவு சிம்மக்குளத்தில் நீராட பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும், கரோனா தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூா் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாலும், பொதுமக்கள் நலன் கருதியும் 11, 12-ஆம் தேதிகளில் நடைபெறும் இவ்விழாவில் பங்கேற்று பொதுமக்கள் தரிசனம் செய்திட இணையவழி மூலமாகவே மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

தரிசனம் செய்ய விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ழ்ஸ்ரீங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் வியாழக்கிழமை முதல் முன்பதிவு செய்யலாம். தரிசனமானது ஒரு மணி நேரத்திற்கு 180 பக்தா்கள் வீதம் நாளொன்றுக்கு 3,000 பக்தா்கள் காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவா். 65 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கும் அனுமதி கிடையாது என்று மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT