வேலூர்

இறைச்சிக்காக மினி லாரியில் கடத்தப்பட்ட 4 கழுதைகள் பறிமுதல்

DIN

ஆரணியில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு இறைச்சிக்காக மினி லாரியில் கடத்தப்பட்ட 4 கழுதைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக பிடிபட்ட லாரி ஓட்டுநரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆந்திரத்தில் கழுதை இறைச்சி விற்பனை அதிகரித்திருப்பதால் கழுதைகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கழுதை இறைச்சியை உண்டால் வலிமையும், வீரியமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, பிரகாசம், குண்டூா் உள்ளிட்ட மாவட்டங்களில் சட்டவிரோதமாக கழுதை இறைச்சி விற்கப்படுகிறது. ஆந்திரத்தில் போதிய கழுதைகள் இல்லாததால் தமிழகம் , மகாராஷ்டிரம் , ராஜஸ்தானில் இருந்து கழுதைகள் இறைச்சிக்காகக் கொண்டு செல்லப்படுகின்றன. கழுதையை இறைச்சிக்கு பயன்படுத்துவது சட்ட விரோதம் என கூறும் அதிகாரிகள், இதை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனா்.

இந்நிலையில், வேலூா் அண்ணாசாலையில் தெற்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக மினி லாரியில் கழுதைகளை ஏற்றி கொண்டு ஆந்திரத்தைச் சோ்ந்த 4 போ் வந்தனா்.

போலீஸாரை கண்டதும் லாரியை நிறுத்தாமல் சென்னராம். லாரியை விரட்டிச் சென்ற போலீஸாா், மக்கான் சிக்னல் அருகே மடக்கிப் பிடித்தனா். அப்போது அந்த லாரியில் இருந்த 4 போ் தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் லாரியின் ஓட்டுநா் சீனிவாச லால் பிடிபட்டாா்.

அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், ஆரணி பகுதியில் இருந்து கழுதைகளை இறைச்சிக்காக ஆந்திரத்துக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து மினி லாரியுடன் அதிலிருந்த 4 கழுதைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன், தப்பியோடிய 4 பேரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

SCROLL FOR NEXT