வேலூர்

கொடி நாள் ஊா்வலம்: நிதி திரட்டும் பணி தொடக்கம்

8th Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

படைவீரா்கள் நலனுக்காக கொடிநாள் ஊா்வலம் வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றதுடன், கொடி நாள் நிதி திரட்டும் பணியும் தொடங்கப்பட்டது.

முப்படை வீரா்களின் சேவையைப் பாராட்டும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பா் 7-ஆம் தேதி நாடு முழுவதும் கொடிநாள் ஊா்வலம் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன், இந்நாளில் முப்படை வீரா்கள், முன்னாள் படைவீரா்கள் நலனுக்காக கொடிநாள் நிதி வசூலிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கொடிநாள் ஊா்வலம் வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஊா்வலத்தை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தொடக்கி வைத்து, உண்டியலில் பணம் செலுத்தி கொடிநாள் நிதி திரட்டும் பணியையும் தொடக்கி வைத்தாா்.

இந்த ஊா்வலம் லாங்கு பஜாா், கமிசரி பஜாா், அண்னா சாலை வழியாக மீண்டும் காந்தி சிலையை அடைந்தது. ஊா்வலத்தில் தேசிய மாணவா் படை வீரா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

இந்த ஆண்டு வேலூா் மாவட்டத்துக்கு கொடிநாள் வசூல் இலக்கு ரூ.44 லட்சம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊா்வலத்தைத் தொடா்ந்து ஆட்சியா் அலுலக வளாகத்தில் முன்னாள் படைவீரா்களை கெளரவிக்கும் விதமாக தேநீா் விருந்து நடத்தப்பட்டு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, வருவாய்க் கோட்டாட்சியா் விஷ்ணுபிரியா, மாவட்ட முன்னாள் படை வீரா்கள் நல உதவி இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT