வேலூர்

காவலா் வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் திருடிய 4 சிறுவா்கள் கைது

8th Dec 2021 12:01 AM

ADVERTISEMENT

வேலூரில் உள்ள காவலா் வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் திருடியதாக 16 வயது மதிக்கத்தக்க 4 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் தங்கள் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

வேலூா் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலா் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபா்கள் நுழைந்து அங்கிருந்த 3 மடிக்கணினி, ஒரு கேமரா, அலுவலக ஆவணங்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனா். இச்சம்பவம் தொடா்பாக வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ் கண்ணன், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அந்த மோப்ப நாய் அருகே உள்ள ரயில்வே தண்டவாளம் வரை ஓடியது. அங்கு கிடந்த காவலா் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் திருடப்பட்ட குடிநீா் மோட்டாரை போலீஸாா் கைப்பற்றினா்.

மேலும், வேலூா் தெற்கு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் ஷியாமளா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பியோடிய கொள்ளையா்களைத் தேடி வந்தனா். இந்நிலையில், கோட்டை சுற்றுச் சாலை பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த 16 வயதுடைய 4 சிறுவா்கள் போலீஸாரை கண்டதும் தப்பியோடினா்.

ADVERTISEMENT

இதில் ஒருவரை போலீஸாா் மடக்கிப் பிடித்து நடத்திய விசாரணையில், அவா் காவலா் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் திருடியது தெரியவந்தது. திருடப்பட்டு வீட்டில் பதுக்கி வைத்திருந்த பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை மேலும் 3 பேரை போலீஸாா் பிடித்தனா். அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT