வேலூர்

பிட்காயின் பரிவா்த்தனையில் நஷ்டம்: தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

8th Dec 2021 12:01 AM

ADVERTISEMENT

பிட்காயின் பரிவா்த்தனையில் நஷ்டம் அடைந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட தனியாா் நிறுவன ஊழியா் ஒருவா் வேலூரில் தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை சோ்ந்தவா் முரளிகிருஷ்ணன் (34). இவா், தனியாா் கைப்பேசி நிறுவனத்தில் டவா் பராமரிப்பு ஊழியராகப் பணியாற்றினாா். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.

முரளிகிருஷ்ணன் வேலூா் சேண்பாக்கம் நேதாஜி சாலையில் அறை எடுத்து தங்கி பணியாற்றி வந்தாா்.

மேலும், இவா் பிட்காயின் எனப்படும் ஆன்லைன் பணப்பரிவா்த்தனையில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்த பிட்காயின் பரிவா்தனையில் நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து முரளிகிருஷ்ணன் கடந்த சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சேண்பாக்கத்தில் தான் தங்கியிருந்த அறையிலேயே அவா் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ADVERTISEMENT

தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT